×

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வழக்கில் கூறுவதாவது: ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த  போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு சட்ட விரோதம் என தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர்.  அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்,  

அதுமட்டுமின்றி அந்த சொத்துக்களில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோரும் பங்கு உள்ளது எனவே அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கூடாது என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனுவை பொறுத்தவையில் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக மாற்ற முயற்சித்தால் அதுஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவே இது சட்டவிரோதம் என வழக்கில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆக வேண்டும் என்பதற்காக கால அவகாசம் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலம் ஒத்திவைத்து அதற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reshuffle ,Jayalalithaa ,Boise House ,government ,Tamil Nadu , Jayalalitha, Poyas, Case, TN Government, Order
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...