×

எச்1பி விசாவிற்கு நிறுவனங்கள் மூலம் முன்பதிவு : புதிய நடைமுறையால் குடியேறிகள் அச்சம்

வாஷிங்க்டன் : அமெரிக்காவில் எச்1பி விசாவிற்கு விண்ணப்பிக்க அந்தந்த நிறுவனங்களே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்தியர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிய எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன் உதவியால் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். குறிப்பாக, தொழில்நுட்ப பணியாளர்கள் அதிகளவில் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது.

இதை கொண்டு அவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை பெற முடியும். இந்நிலையில்  டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதலே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதனால் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை கடும் கெடுபிடி காட்டி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் எச்1பி விசாவிற்கு விண்ணப்பிக்க அந்தந்த நிறுவனங்களே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் குறித்த விவரங்களை அந்தந்த நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பணியாளர்களின் விவரங்களை முன்பதிவு செய்யும் போது அனைத்து தகவல்களும் 100% சரியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் யாருக்கெல்லாம் எச்1பி விசா கொடுக்க வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்பதை அங்குள்ள நிறுவனங்களும் அமெரிக்க அரசு முடிவெடுக்கும் சூழல் உருவாகி உள்ளதால் அங்கு பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்களும் அச்சத்தில் உள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : companies ,Settlers , Reservation by companies for H1B visa: Settlers fear the new practice
× RELATED முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்