×

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சி: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

சென்னை: நாட்டையே உலுக்கிய குட்கா வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.அன்பழகன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி இருப்பதை சுட்டிக்காட்யுள்ளார்.

குட்கா ஊழல் வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து வந்த கண்ணன் என்ற அதிகாரி திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பாபு என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சிபிஐயின் இந்த நடவடிக்கை குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை காப்பாற்றுவதாக உள்ளதாக ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் மத்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கடிதத்தில் கூறியுள்ள அவர் இந்த வழக்கு சிபிஐயின் பொருளாதார பிரிவிற்கு மாற்றப்பட்டது ஏன்? என்று வினவியுள்ளார்.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் குட்கா ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டிருப்பது மத்திய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருப்பதாக அவர் சாடியுள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குட்கா வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர் உண்மை குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையேல் உச்சநீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudsa ,DMK ,government , Try,save,Gudka scam case,DMK,allegation,federal government
× RELATED திமுக அரசு செய்த பணிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி: கமல்ஹாசன் அறிக்கை