×

மக்களின் உடல் நலனோடு விளையாட மாட்டோம்: வெங்கடசுப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர்

ராஜஸ்தான் மாநிலம் ேஜாத்பூரில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட நாய்க்கறி என்று கூறுவது 100 சதவீதம் கற்பனை தான். அப்படி நாய்க்கறி என்று கூறுபவர்கள், அந்த கறியை ஆய்வு செய்து அதன்பிறகே அழித்து இருக்க வேண்டும். ஆனால், அவசரப்பட்டு ரயிலில் கொண்டு வரப்பட்ட இறைச்சியை உடனடியாக அழித்து விட்டனர். இந்த இறைச்சியை வாங்குபவர்கள் கூட, அதை நாங்கள் தான் ஆர்டர் கொடுத்தோம். எங்களது ஆவணத்தை வேண்டுமென்றாலும் வைத்து கொண்டு இறைச்சி கொடுத்தால் சரி  என்று கேட்டனர். இவ்வளவுக்கு பிறகு நாய்க்கறி என்று கூறி அழித்து விட்டனர். இதில், ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது. பாதுகாப்பாக அந்த இறைச்சி கொண்டு வரப்பட்டதா என்று பரிசோதித்து பார்த்து இருக்கலாம். ஆனால், அதை விடுத்து தவறான தகவலை பரப்பி இருக்கின்றனர். எந்த வித ஆதாரமும் இல்லாமல் அப்படி பரப்பியுள்ளனர். இது தவறான முன்னுதாரணம். எந்த ஓட்டல் உரிமையாளரும் கலப்பட பொருளை அனுமதிக்க மாட்டார்கள். நாங்களும் எங்களது ஓட்டலில் தான் சாப்பிடுகிறோம். வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள்  உயிரோடு இருந்தால் தான் எங்களுக்கு ெரகுலர் வாடிக்கையாளராக இருப்பார்கள். அப்படிபட்ட எங்களது வாடிக்கையாளரின் உடல் நலனோடு விளையாட மாட்டோம்.

 குறுகிய கால லாபத்திற்காக நினைக்கிறதே இல்லை. நீண்ட கால லாபத்தை நாங்கள் நினைக்கும் போது எங்களது வாடிக்கையாளரின் நலனில் நாங்கள் அக்கறை காட்டத்தான் செய்வோம். எந்த தரமான ஓட்டல்களிலும் தரக்குறைவான பொருள் என்று தெரிந்து நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். தெரிந்தால் நாங்களே நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். சாலைகளில் உள்ள சிற்றுண்டி கடைகளை பற்றி  எங்களுக்கு தெரியாது. அந்த கடைகளில் சில இடங்களில் குறைவான விலையில்  கொடுத்தால் நிச்சயம் தரமாக இருக்காது. அது எப்படி என்று எங்களுக்கு தெரியாது. அது பற்றி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் எந்த நேரத்திலும் தரமான உணவை தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். தமிழகத்தில் எங்களது சங்கத்திற்கு 1 லட்சம் ஓட்டல் உரிமையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். எங்களது சங்கத்திற்குட்பட்ட ஓட்டல்கள் இது போன்ற கலப்பட உணவு தயாரிப்பது கிடையாது என்பதை நிச்சயம் அடித்துச்சொல்வோம். அப்படி ஏதாவது நடந்தால் நாங்களே நடவடிக்கை எடுப்போம்.

பிளாஸ்டிக் முட்டை வந்திருப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். அப்படி பிளாஸ்டிக் முட்டை இந்தியாவில் வந்து விட்டதா என்பது அடிப்படை ஆதாரமற்ற ஒன்று. தமிழகத்தில் முட்டை என்பது தாராளமாக கிடைக்கிறது. ரூ.4 வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் முட்டை தயாரிக்க ரூ.5க்கு மேல் ஆகும். அப்படி இருக்கையில் யார் கஷ்டப்பட்டு பிளாஸ்டிக் முட்டையை தயாரித்து விற்பார்கள். எனவே, இதையெல்லாம் பார்க்கும் போது வதந்தியாகத்தான் உள்ளது. கலப்படம் என்பது பல வழிகளில் உள்ளது. அரிசி, உளுந்தம் பருப்புடன் கல் சேர்ப்பது, பால் உடன் கெமிக்கல் சேர்ப்பது, காபித்தூள் உடன் புளியங்கொட்டை சேர்ப்பது போன்ற கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் உள்ள சிற்றுண்டி கடைகளை பற்றி  எங்களுக்கு தெரியாது. அந்த கடைகளில் சில இடங்களில் குறைவான விலையில்  கொடுத்தால் நிச்சயம் தரமாக இருக்காது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Venkatasupu ,hotel owner association ,Tamil Nadu , With the health of the people We will not play: Venkatasupu, president of Tamil Nadu hotel owner association
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...