×

கடந்த வார பங்குச்சந்தையில் 6 நிறுவனங்களுக்கு ரூ.74,034 கோடி இழப்பு

மும்ைப: கடந்த வார பங்குச்சந்தையில் ஆறு நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.74,034 கோடியை இழந்தன. கடந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால், 4 நாட்களிலேயே பங்குச்சந்தையில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் டிசிஎஸ் பங்கு மதிப்பு அதிகபட்சமாக ரூ.25,140.37 கோடி இழந்து ரூ.6,81,151.63 கோடியாக இருந்தது.

இதுபோல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூ.15,614.92 கோடி, இன்போசிஸ் ரூ.13,103.81 கோடி, ஐசிஐசிஐ ரூ.9,818.94 கோடி, பாரத ஸ்டேட் வங்கி ரூ.6,871.16 கோடி பங்கு மதிப்பை இழந்தன. கடந்த வார இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் மொத்தம் 476.14 புள்ளி சரிந்து 34,981.02 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 10526.75 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம், கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பங்கு வர்த்தக போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firms , stock market,
× RELATED ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு...