×

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 30.5 லட்சத்தில் நிவாரண பொருட்கள்

தாம்பரம்: கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ₹30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தாம்பரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உட்பட 6 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் உணவு இன்றி கடும் அவதிப்பட்டு  வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ₹12 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள், பருப்பு, சர்க்கரை, எண்ணெய், ரவை, மைதா, கோதுமை, சோப்பு, பெட்ஷீட், கொசுவர்த்திகள், மெழுகுவர்த்திகள், பேஸ்ட், நாப்கின்,  பாய், டவல், சோலார் லைட் உட்பட 34 வகையான வீட்டு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நரியங்காடு ஆகிய பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக தாம்பரத்தில் இருந்து  அனுப்பி வைக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் 50 தொண்டர்களும் மீட்பு பணிக்கு சென்றுள்ளனர்.

வணிகர் சங்கம் சார்பில் காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமுல்ராஜ் தலைமையில், தாம்பரம் வணிகர் சங்க நிர்வாகி சேகர், ஜெயராமன், காஜா மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கஜா புயல் நிவாரணமாக ₹10  லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய நிவாரண பொருட்களை தாம்பரத்தில் இருந்து இரண்டு லாரிகள் மூலம் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.தமிழ்நாடு டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ₹7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாம்பரத்தில் இருந்து  அனுப்பிவைத்தனர். பம்மல் சங்கர் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் இணைந்து அரிசி, பருப்பு, போர்வை, நாப்கின் உள்ளிட்ட ₹1  லட்சம் மதிப்பலான அத்தியாவசிய பொருட்களை திரட்டி, 4 லாரிகளில் நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas , areas, affected , Ghazi storm
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்