×

வேளச்சேரி பிராமணர் தெருவில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி






வேளச்சேரி: வேளச்சேரி, பிராமணர் தெருவில் உள்ள குளத்தில் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, அடையாறு 13வது மண்டலம், 178வது வார்டு வேளச்சேரி பிராமணர் தெருவில் கங்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகில் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம்  உள்ளது. சுமார் 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குளத்து நீர் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. நாளடைவில், குளத்தை பராமரிக்காமல் கைவிட்டதால் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தற்போது கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறி உள்ளது.  இதனால் குளத்து நீர் மாசடைந்து உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் யாரும் குளத்தின் அருகே செல்லாததால், அந்த பகுதியை சேர்ந்த சிலர் குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இதனால்  குளத்தின் பரப்பளவும் வெகுவாக சுருங்கி குட்டையாக உள்ளது.

தற்போது குளத்து நீர் மாசடைந்தும், ஆகாய தாமரை படர்ந்தும் உள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல்  அவதிப்படுகின்றனர். அதிக கொசு தொல்லையால், பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் குறையும்போது துர்நாற்றம் வீசுவதால்  சுற்றுச்சூழல்  பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்குவதால், இப்பகுதியின் நிலத்தடி  நீரும் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றி குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தவும், குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி, படிக்கட்டு  அமைக்கவும் வேண்டும் என்று அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velankachi Brahmin ,sewing pool ,street , Velaschery ,Brahmin Street,, suffering ,stink
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு