×

நடிகர் அம்பரீஷ் மரணம் தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருநாவுக்கரசர்(தமிழக காங்கிரஸ் தலைவர்): பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் உடல் நலக் குறைவால் காலமானார் எனும் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். கர்நாடகாவில் சித்தராமையா மந்திரி சபையில் அமைச்சராக திறம்பட  செயல்பட்டவர். சிறந்த பண்பாளர். அம்பரீஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தோழர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த  அனுதாபங்கள்.

பிரசிடெண்ட்  அபூபக்கர்(இந்திய  ஹஜ்  அசோசியேஷன்  தலைவர்): நடிகர் அம்பரீஷ் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நட்பின் இலக்கணமாய் திகழ்ந்த அம்பரீஷ் 29வது திருமண நாள் வரும் டிசம்பர் 8ம் தேதி வர உள்ளது.  இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று எண்ணியிருந்த நேரத்தில் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambareesh ,death ,leaders , Actor Ambresh's ,death, leaders mourn
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்