×

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று தொடங்கியது. வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலை ராஜாவூர் இறைமக்கள் பங்கேற்ற திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோட்டார் தெற்கு, வடக்கு ஊர் பங்கு இறை மக்கள் சார்பில் பேராலய அருட்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.  மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமை வகித்து கொடியேற்றினார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் இன்று (25ம் தேதி) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து மற்றும் காலை 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி நடக்கிறது. மாலையில் 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. விழா நாட்களில் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரைதினமும் காலை 5.30, காலை 6.30, காலை 9.30 காலை 11.30, உள்ளிட்ட வேளைகளில் திருப்பலிகள், மாலை 6.15க்கு ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியனவும் அருட்பணியாளர்களால் நிறைவேற்றப்படுகிறது.  நவம்பர் 30ம் தேதி மாலை 6.15 மணிக்கு ஆடும்பர கூட்டு திருப்பலியில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமை வகிக்கிறார். டிசம்பர் 1ம் தேதி மாலை ஆடம்பர கூட்டு திருப்பலியில் ஓய்வுபெற்ற கோட்டாறு பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

அன்று இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, கோட்டாறு ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. 3ம் ம் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடக்கிறது. பிஷப் நசரேசன் சூசை தலைமை வகித்து கலந்துகொள்கிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட ஆயர் பதில்குரு கிளாடின் அலெக்ஸ் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவு 10ம் நாளன்று காலை 11 மணிக்கு நடைபெறுகின்ற சிறப்பு தேர்பவனியின்போது பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் மாதா தேர்களின் பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம், உருண்டு வேண்டுதல் போன்றவையும் .நடைபெறுகிறது.

 திருக்கொடியிறக்க நிகழ்வு டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்வின்போது புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியார் திருப்பண்ட பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல், நற்கருணை ஆசீர் ஆகியனவும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடைபெறும். கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kottar Sacred Svaryan Paralaya Festival , Katturai Holy Saviar festival festival, Flag
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது