×

அறந்தாங்கி அருகே இரவு-பகலாக மின்கம்பங்களை நட்டு, மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஊழியர்கள்

அறந்தாங்கி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில், 10வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். கஜா புயலின் தாக்கத்தால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரசர்குளம், ஆயிங்குடி, மங்களநாடு, நாகுடி, குருந்திரகோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதையடுத்து, உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மின் துறை ஊழியர்கள், சேதமடைந்த மின்கம்பங்களுக்குப் பதிலாக, புதிய மின்கம்பங்களை நட்டு, மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 10வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியில், அறந்தாங்கி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களும், கிராமப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் தொடர்ந்து இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.இதையடுத்து, அறந்தாங்கி நகர்ப் பகுதியில் 70 சதவீதம் வரையும், கிராமப் பகுதிகளில் 35 சதவீதம் வரையும் மின் விநியோகம் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nights ,Aranthangi , Strike,night-day nights ,Aranthangi,employees, power supply
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு