×

இலங்கை பிரச்னையை வைத்து அதிபர் சிறிசேனா புத்தகம் எழுதுகிறார்

கொழும்பு: இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்னையை மையமாக கொண்டு அதிபர் சிறிசேனா புத்தகம் ஒன்றை எழுதுகிறார்.இலங்கையில், அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடனான கருத்து வேறுபாட்டால், கடந்த அக்டோபர் 26ம் தேதி ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டார். தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சேயால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அதை கலைத்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்தல் அறிவிப்புக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து நடந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் அதிபர் சிறிசேனா நேற்று கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்னையை மையமாக கொண்டு ஒரு புத்தகம் எழுதி வருகிறேன்.  அதற்கு `ரணில் உடனான வெற்றி பெறாத அரசியல் திருமணம்’ என பெயர் வைத்துள்ளேன்.என்னை குறை கூறும் நீங்கள் நான் புத்தகம் எழுதும் வரை பொறுத்திருங்கள். ஊழலுக்கு எதிரான மற்றும் துரோகத்திற்கு எதிரான சிந்தனையுள்ளவர்கள் என்னுடன் இருப்பார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lanka , Sri Lankan Political Issue, President Sirisena, Book
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...