×

திருத்துறைப்பூண்டி அருகே பரிதாபம் : புயலில் தென்னை அழிந்ததால் மேலும் ஒரு விவசாயி பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே புயலுக்கு தென்னை அழிந்ததால் மேலும் ஒரு விவசாயி அதிர்ச்சியில் பலியானார்.கஜா  புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக 1 கோடி தென்னை மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள்  கண்ணீர் வடித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  உள்ள சோழகன்குடிக்காட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன்(55) என்பவர், தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் கடந்த 21ம் தேதி விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார். அதேபோல் தென்னைகள் சாய்ந்ததால் ஒரத்தநாடு அருகே  உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவாஜி அதிர்ச்சியிலும், வாழை மரங்கள் விழுந்ததால் திருச்சி மேலகொண்டயம்பேட்டையை சேர்ந்த  செல்வராஜ் ரயிலில் பாய்ந்தும் இறந்தனர்.

இந்த சோகங்கள் மறைவதற்குள், தென்னைகளை இழந்த மற்றொரு விவசாயி உயிரிழந்துள்ளார். திருவாரூர்  மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் ரயிலடி தெருவை   சேர்ந்தவர் வீர ரவி(52). இவருக்கு மரகதவள்ளி(43) என்ற மனைவி,  துர்காதேவி(23), கார்த்திகா(19) ஆகிய மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு  இன்னும் திருமணமாகவில்லை. வீர ரவிக்கு சொந்தமாக 40 தென்னை  மரங்கள் இருந்தன. இதில் 20 தென்னை மரங்கள் புயலால்  முறிந்து விழுந்தன. தினமும் இந்த மரங்களை பார்த்து புலம்பிக்கொண்டே  இருந்தார். ேநற்று காலையும் மரங்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த  வீரரவி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு தூக்கி  சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மாரடைப்பில் இறந்து விட்டதாக  கூறினார். தென்னை மரங்கள் விழுந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டு வீர ரவி  இறந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruthuraibandi ,storm , Coconut, farmer shock, gaaj storm
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு