×

ஹோண்டா புதிய எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும்  ஆபத்தை விளைவிக்கிறது. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக்  வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியங்களும் வழங்கப்படுகிறது.  எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்கின்றன. ஒரு சில  முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தசூழலில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் வேகன்-ஆர்  காரை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில்  எலெக்ட்ரிக் வேகன்-ஆர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் வேகன்-ஆர் காருக்கு ‘’செக்’’ வைக்க ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வேகன்-ஆர் காருக்கு போட்டியாக சிறிய  எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் வரும் 2023ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் டீசல் கார் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம் மிக தாமதமாகத்தான் நுழைந்தது. எலெக்ட்ரிக் கார் விஷயத்திலும் அதே தவறை செய்ய வேண்டாம் என ஹோண்டா நிறுவனம் விழித்துக்கொண்டுள்ளது. எனவே,  மிக விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவிட வேண்டும் என ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில், மஹிந்திரா, டாடா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள்  இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடன் ஹோண்டா சற்று தாமதமாகத்தான் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகன்-ஆர் எலெக்ட்ரிக் காருக்கு  போட்டியாக ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள சிறிய எலெக்ட்ரிக் கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 150-200 கி.மீ தூரம் வரை செல்லும். விலை விவரம் மற்றும் உற்பத்தி நிலவரம் அறிவிக்கப்படவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honda , Honda's,new,electric,car
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...