×

புறநகர் பகுதியில் மழை கொட்டியும் திருப்போரூரில் நிரம்பாத ஏரிகள்

திருப்போரூர்: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சில பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டது. வரவு கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் கரைகள் பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர்வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரிகளான கொண்டங்கி, தையூர் ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இருப்பினும் பல கிராமங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘’ மழைவரும் முன்பே ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரம்ப வசதி செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் தற்போது பெய்துவரும் மழைநீரை சேமிக்க வழியில்லாமல் போய்விட்டது. வருடந்தோறும் இந்த நிலைமைதான் உள்ளது. இனிமேலாவது அரசு விழித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,suburbs , Suburbs, rain, Tiruppur, untouched lakes
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!