×

கஜா புயல் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை:  கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13,32,67,288 வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கியுள்ளனர். ‘கஜா’ புயல் கடந்த 16ந்தேதி அன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடந்து கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதத்தினை உண்டாக்கியது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் உயிர்ச்சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும், புயலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் படகுகள், மரங்கள், பயிர்கள், குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மின்சார கட்டமைப்புகள் 24,941 பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறப்பு மருத்துவ குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக, பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயல்  நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிட நன்கொடைகள் வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கியவர்களின் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu , Gajah Storm, Relief Fund, Rs.13.32 crore, Tamilnadu Government, Information
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...