×

நாடு முழுவதும் சுமார் 25 கோடி பேரின் 2ஜி செல்போன் இணைப்புகள் விரைவில் துண்டிக்கப்படும்: செல்போன் நிறுவங்கள் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 25 கோடி பேரின் 2ஜி செல்போன் இணைப்புகள் விரைவில் துண்டிக்கப்படவுள்ளன. மாதம் தோறும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே செல்போன் எண்ணை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், 2ஜி எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறு ரீசார்ஜ் செய்யப்படாத 2ஜி செல்போன் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10 கோடி பேர் ஏர்டெல் வாடிக்கையாளர்களாகவும், சுமார் 15 கோடி பேர் வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் அவுட் கோயிங் கால் சேவைக்காக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் செல்போன் இணைப்புக்கள் 30 நாட்களில் துண்டிக்கப்படும் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மேலும் சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால் சேவையும் 45 நாட்களில் துண்டிக்கப்படும் எனவும் செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 2G,cell phone,connection,disconnected,Notice,cellphone companies
× RELATED வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில்...