×

காஷ்மீரில் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: லஷ்கர், முஜாகிதினை சேர்ந்தவர்கள்

காஷ்மீர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில்  தீவிரவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிஜ்பெஹரா பகுதியில் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை தொடர்ந்த தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் சாத் மாலீக், உனாயிஸ் ஷபி, ஷாகித் பசிர், பசித் இஸ்தியாக், அகிப் நஜார் மற்றும் பிர்தோஷ் நஜார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலங்களில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் அதிகளவில் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று.  காஷ்மீர் போலீஸ் ஐஜி ஸ்வயம் பிரகாஷ் பானி கூறுகையில், ‘‘கொல்லப்பட்ட தீவிரவாதிகளில்  யுனாய்ஸ் ஷபி, இஷ்தியாக் ஆகியோர் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள். இதில், யுனாய்ஸ் அந்த அமைப்பின் அனந்த்நாக் மாவட்ட தளபதியாக இருந்தான்.
மற்றொரு தீவிரவாதியான ஆசாத் அகமது மாலிக், பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலையில் தொடர்புடையவன்’’ என்றார்.

இந்திய- பாக். ராணுவம் பேச்சு
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ படைப்பிரிவு தளபதிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று காலை  எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள  பூஞ்ச்-ரவலாக்கோட் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தளபதி விஎஸ் ஷேகன் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சார்பில் தளபதி கெய்சர் தலைமையிலான குழுவும் பங்கேற்றது. அவர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை நிலவ செய்வது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவல் நடை பெறுவதை தடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,Kashmir ,Mujahideen ,Lashkar , Kashmir, 6 militants, shot dead, Lashkar, Mujahideen
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...