×

மன்னார்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன் கார் முற்றுகை: மின்சாரம் இல்லாததால் மக்கள் ஆவேசம்

மன்னார்குடி: கஜா புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. மக்கள் வீடுகளின்றி, உணவின்றி, தங்கயிடமின்றி தவித்து வருகின்றனர். வருமானத்திற்கு வழியாக இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்ததால், விவசாயிகள மனமுடைந்துள்ளனர். வீடுகளை இழந்தோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே உணவுகள் அளிக்கப்படுகிறது.கஜா புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. மக்கள் வீடுகளின்றி, உணவின்றி, தங்கயிடமின்றி தவித்து வருகின்றனர். வருமானத்திற்கு வழியாக இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்ததால், விவசாயிகள மனமுடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மன்னார்குடி அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்ற காரை மறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. கஜா புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் மன்னார்குடி 33 ஆம் வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கிறது.

மின்கம்பங்கள் பற்றாக்குறையால் மின்விநியோகத்தை சீரமைக்க முடியவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் நெடுவாக்கோட்டையில் அடிக்கிவைக்கப்பட்டருக்கும் மின்கம்பங்களை எடுத்து வரும்படி வலியுறுத்தி பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பொன். ராதாகிருஷ்ணனின் காரையும் அவர்கள் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரில் இருந்து இறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மின்கம்பங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.      


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnarakrishnan ,Mannargudi , Mannargudi, Gajah Storm, Trees, Vintage
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...