×

சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தும் வறண்டு கிடக்கும் பள்ளமடை குளம் : விவசாயிகள் கவலை

மானூர்:  சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் மானூர் அருகே உள்ள பள்ளமடை குளம் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவில் உள்ள பள்ளமடை குளம், மானூர் பெரியகுளம் போன்று 7 கிராமங்களின் 3500 ஏக்கர் விவசாய நஞ்சை நிலங்களை உடைய பெரிய குளமாகும். இதன் மூலம் பல்லிக்கோட்டை, நெல்லைதிருத்து, அலவந்தான்குளம், தென்கலம்புதூர், நல்லம்மாள்புரம், புளியங்கொட்டாரம், பள்ளமடை ஆகிய கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறுகின்றன.
இந்த குளத்திற்கு சிற்றாற்றில், நெட்டூர் அருகே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 22 கிலோ மீட்டர் மேலுள்ள கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் வருவது அரிதாக உள்ளது.

இந்தாண்டு இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பெரியஅளவில் கைகொடுக்காவிட்டாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மானூர் வடபகுதியான கங்கைகொண்டான் வரையிலும், மானூரின் மையப் பகுதியான மானூர் வரையிலும் உள்ள அனைத்து சிறிய குளங்களும் நிறைந்து மானூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வந்துள்ளது. இருப்பினும் இதனருகில் உள்ள பள்ளமடை குளம் வறண்டு வானம் பார்த்த குளமாக மாறியுள்ளது. இதனால் இந்த குளத்தை நம்பியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் கவலையடைந்து உள்ளனர். மேலும் மழை மற்றும் குளத்துக்கு தண்ணீர் வருமாறு என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளமடை குள பாசன விவசாயிகள் கூறியதாவது: பள்ளமடை குளத்தின் கால்வாய் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. அருணாசலப்பேரி அருகே ஆக்கிரமிப்புகளும், கருவேல மரங்களும் உள்ளன. புங்கன் குளத்தின் மடை ஷட்டர் இல்லாமல் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே பள்ளமடை குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைத்து உடனடியாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2016ம் ஆண்டு ரூ.1.70 கோடியில் பள்ளமடை கால்வாய் பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதேபோல் போர்க்கால அடிப்படையில் கால்வாயில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : citadel , Rivulet, water, farmers
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி