×

பவுர்ணமியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் மஹா ஆரத்தி : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பின் மஹா புஷ்கர விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழா பனிரெண்டு சிவாலயம் களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலய தீர்த்த படித்துறையில் நடந்தது. தொடர்ந்து பவுர்ணமி தோறும் மஹா ஆரத்தி நடத்த சமய பெரியோர்களால் தீர்மானிக்கபட்டது. இதனையடுத்து பவுர்ணமியை  முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் மஹா ஆரத்தி நிகழ்ச்சி துவங்கியது. காலையில் மஹா தேவர் ஆலயத்தில் சிறப்பு தீபாரதனை நடந்தது.

தொடர்ந்து திருவாசகம் ஓதல் நடைபெற்றது. மாலையில் தீர்த்த படித்துறையில் கோயில் தலைமை அர்ச்சகர் தலைமையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி நடைபெற்றது. அப்போது தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.  குமரி மாவட்ட மஹா புஷ்கர விழா கமிட்டி சார்பில் அதன் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இந்த விழாவில் பாஜ மாநில பொதுகுழு உறுப்பினர் ஜெயசீலன், பாஜ மாவட்ட செயலாளர் முருகன், பாஜ மேல்புறம் ஒன்றிய செயலாளர் முருகன், மஹா தேவர் ஆலய கமிட்டி செயலாளர் சுஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maha Aradhi ,river ,Pournami ,Thamiraparani ,Devotees , powrnami, Thamirabarani, devotees
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை