×

மத்திய அமைச்சரவை முடிவு: தாத்ரா நகர் ஹவேலியில் புதிய மருத்துவ கல்லூரி

புதுடெல்லி,: யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் மருத்துவக் கல்லூரி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் மருத்துவக் கல்லூரி அமைப்பது, காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சீக்கிய குருத்வாரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:  
* தாத்ரா நகர் ஹவேலி மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் மேம்பட்ட மருத்துவ வசதி பெறும் வகையில் அங்குள்ள சில்வாசாவில் 189 கோடி செலவில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.  இதன்மூலம், அங்குள்ள பழங்குடியின மாணவர்கள் அதிக பயன் அடைவார்கள்.
* இந்தியாவை ஒட்டிய சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குரு குருநானக் தேவ் இறுதியாக தங்கிய இடமும், சீக்கியர்களின் புனிதத்தலமுமான கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்துவாராவிற்கு பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் இருந்து நவீன இணைப்பு சாலை அமைக்கப்படும்.  
* பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க சுல்தான்பூர் லோதி நகரம் மேம்படுத்தப்படும்.
* அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குருநானக்கின் 550வது பிறந்த தினத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது். மேலும் அவர் தொடர்பான புனித தலங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படும்.
* அனைத்து உணவு தானியங்களையும் சணல் சாக்குப்பைகளில்தான் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்ப,டி உணவு தானியங்கள் 100 சதவீதம் அளவுக்கும், சர்க்கரை 20 சதவீதம் அளவுக்கும் கட்டாயம் சணல் பைகளில்தான் கட்ட வேண்டும். இதன் மூலம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், ஆந்திரா, மேகாலயா, திரிபுராவை சேர்ந்த சணல் விவசாயிகள் மற்றும் 3.7 லட்சம் பணியாளர்கள் பலனடைவார்கள்.
* வானிலை, கடல் தொடர்பான முன்னெச்சரிக்கை காலநிலையை ேமம்படுத்தும் வகையில் 9 துணை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, 2017-2020ம் ஆண்டு காலத்தில் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இது தவிர வளிமண்டல ஆராய்ச்சிக்காக தேசிய அளவிலான அமைப்பை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Haveli , Central Cabinet, Dadra Nagar Haveli, New Medical College
× RELATED தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி எம்பி மோகன்...