×

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு ஒத்திவைப்பு

கோவை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த 2015ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு உயரதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என கூறப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சம்பந்தப்பட்டுள்ள போலீஸ் உயரதிகாரிகளை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் கோவை சிஜேஎம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் சிபிஐ தரப்பில் அதிகாரிகள் ஆஜராகாததால் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DSP Vishnupriya , DSP Vishnupriya case, adjournment
× RELATED டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை வாக்குமூலம்