×

சையது மோடி பேட்மின்டன்..... கால் இறுதியில் சாய்னா

லக்னோ: சையது மோடி உலக டூர் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார். நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் அவர், சக நாட்டவரான அமோலிகா சிங் சிசோடியாவை எதிர்த்து விளையாடினார். இதில் சாய்னா 21-14, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் சக நாட்டவரான ரிதுபர்னா தாசை அவர் எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பாருபள்ளி காஷ்யப் 9-21, 22-20, 21-8 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் பிர்மன் அப்துல் கோலிக்கை போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். சமீர் வர்மா, சாய் பிரனீத் ஆகிய இந்திய வீரர்களும் கால் இறுதிக்குள் நுழைந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina , Syed Modi Badminton, Saina
× RELATED அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு...