×

சபரிமலையில் காவல்துறையினர் மனிதாபிமானத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை: நிலக்கல் பகுதிக்கு செல்லும்போது குறைந்த அளவே மக்கள் கூட்டம் இருந்தது என்று சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அனுமதி கிடையாது என  கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு பின்னால் வந்தவர்களை அனுமதிக்க எஸ்.பி மறுத்துவிட்டார். சபரிமலையில் காவல்துறையினர் மனிதாபிமானத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என தெரிவித்துள்ளார். சபரிமலை கோயிலில் தடுப்புகள் அமைத்து யுத்தகளம் போல் உள்ளது.

பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. போலீசார் மனிதாபிமான அடிப்படையில் அணுகியதாக தெரியவில்லை. விஷமிகள் வந்து விடக்கூடாது எனக்கூறி பக்தர்கள் மீது கெடுபிடி விதிக்கப்படுகிறது. சபரிமலையில் எப்போதும் சரண கோஷமும், பக்தி பாடல்களும் ஒலிக்கும். இப்போது அந்த நிலை இல்லை. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும். தீபம் காட்டியவர்கள், சரண கோஷம் போட்டவர்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சபரிமலை கேரளாவுக்கு சொந்தமானது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala , Sabarimala, Police, Ponnarathakrishnan
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...