×

ஏமனில் போர்நிறுத்தம் தொடர்பாக கிளர்ச்சியாளர்களுடன் ஐ.நா. தூதர் விரைவில் பேச்சுவார்த்தை

சனா: ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது.

ஏமனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உதவிக்குழுக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. அப்படி இருந்தும் ஒவ்வொரு மாதமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக் குறைவால் உயிரிழக்கிறார்கள். ஏமன் குழந்தைகளின் மரணம் குறித்த அறிக்கையில், ஏப்ரல் 2015-ல் இருந்து அக்டோபர் 2018-ம் ஆண்டு வரையில் 84,701 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிக் குழுக்குள் தங்களால் கூடுமான வரை உணவுப் பொருள்களை விநியோகம் செய்தன. ஆனாலும் மக்களின் உணவுத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்துவரும் ஐ.நா போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் நம் கண்முன்னே ஏமன் பஞ்சத்தால் அழியும் என்று எச்சரித்தது. அதன் விளைவாகக் கடந்த சில தினங்களாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஐ.நா. தூதர் மார்ட்டின் கிரிபித்ஸ் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : United Nations ,ceasefire ,insurgents ,Yemen ,Ambassador , Yemen, war, UN, ceasefire, negotiation
× RELATED உலக புத்தக தினத்தையொட்டி பெரம்பலூர் நூலகத்தில் புத்தகம் வாசிப்பு