×

இத்தாலியில் கடல் நீரை உறிஞ்சியெடுக்கும் சூறாவளி: வீடியோ காட்சிகள் வெளியீடு

இத்தாலி: இத்தாலியில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இத்தாலியின் தெற்கு பகுதியில் வீசிய கடும் சூறாவளியின் காரணமாக டொரிசனோ நகரம் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. டொரிசனோ நகரை சூறாவளி கடந்த நிலையில், பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சூறாவளியால் டொரிசனோ நகரம் மட்டுமின்றி, குரோட்டோன் மாகாணத்தின் கியூட்ரோ மற்றும் தென்மேற்கு இத்தாலியின் சலேர்னோ ஆகிய நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் அந்நாட்டில் உள்ள சாலர்னோ என்ற கடற்கரையை இந்த சூறாவளி கடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. கடலில் சுற்றிச் சுழன்றி வரும் சூறாவளிக் காற்றானது கடல் நீரை வாரிச் சுருட்டி உறிஞ்சி எடுப்பது போன்ற காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல நூறு கனஅடி கொள்ளளவு கொண்ட அந்தக் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி காற்றினால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Italy , Italy,hurricane,sea water,video
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்