×

திமுக ஆட்சிக்கு வந்ததும் பாலாற்றில் தடுப்பணை; திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி: மு,க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி

ஜோலார்பேட்டை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில்; ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர்கள் ஜோலார்பேட்டை-தேவராஜ், திருப்பத்தூர்-நல்லதம்பி, ஆம்பூர்-வில்வநாதன், வாணியம்பாடி தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளர் நரி முகமது நயிமை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஐயுஎம்எல் வேட்பாளருக்கு ஏணி சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் பதவியை பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு கே.சி.வீரமணி எதுவும் செய்யவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது மத்திய பாஜக அரசு.  தனது கல்லூரிக்காக மணல் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விதிமீறலை தைரியமாக செய்தவர் தான் கே.சி.வீரமணி. கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் அமைச்சர் கே.சி.வீரமணி. கொள்ளை அடித்த கே.சி.வீரமணியை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததுதான் அதிமுக அரசு. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்து இருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது. குடியுரிமை சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் ஆதரித்தனர். தேர்தலுக்காக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி, ராமதாஸ் நாடகம் போடுகின்றனர். வேளாண் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் அதிமுக பொய் வாக்குறுதியை அளித்துள்ளது. எப்போது சிறுபான்மை மக்களுக்கு திமுக குரல் கொடுக்கும். கல்வி, வேலை வாய்ப்பில் சிறுபான்மையினர் உரியபங்கினை பெற சச்சார் ஆணைய பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தப்படும். வக்பு வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி டெபாசிட் கூட வாங்க முடியாது. எடப்பாடி தொகுதியில் நேற்று வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்த போது கண்டறிந்ததாக ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். திருப்பத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். ஜலகம்பாறை அருவியை சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வாது மலையில் மூலிகை பண்ணை, வாணியம்பாடியில் சந்தனமர தொழிற்சாலை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவுப்பத்தி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் உறுதி அளித்தார். …

The post திமுக ஆட்சிக்கு வந்ததும் பாலாற்றில் தடுப்பணை; திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி: மு,க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Paladu ,Dizhagam ,Government Medical College ,Thirupattur ,Mu ,K. Stalin ,Jolarbate ,Tamil Nadu ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து...