×

பென்ஷன் வாங்குபவரா நீங்கள் வங்கியில் உயிர்ச்சான்று சமர்ப்பித்து விட்டீர்களா?

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் வரும் 30ம் தேதிக்குள் இந்த சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வங்கிக்கு அல்லது கருவூலத்துக்கு நேரில் சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டிய நடைமுறை முன்பு இருந்தது. இதனால் ஓய்வூதியர்கள் பல சிரமங்களை சந்தித்தனர். இதை எளிதாக்கும் வகையில் 2014 நவம்பர் 10ம் தேதி ஜீவன் பிரமான் என்ற டிஜிட்டல் உயிர்ச்சான்று நடைமுறையை பிரதமர் துவக்கி வைத்தார். இதன்மூலம் வீட்டில் இருந்து கூட ஸ்மார்ட் போன் மூலம் சான்று சமர்ப்பிக்க முடியும். ஆதார் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து கைரேகை அல்லது கண் கருவிழி ஸ்கேன் செய்து உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். அப்போது பென்ஷன் எண், கருவூலம், வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டி வரும். வங்கி கிளைகளிலும் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வசதிகள் உள்ளன.

அவ்வாறு இருப்பின் வங்கியிலேயே தங்கள் உயிர்ச்சான்றை பதிவு செய்யலாம். உயிர்ச்சான்று பதிவு செய்த பிறகு சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு பரிவர்த்தனை எண்ணுடன் உறுதி செய்யப்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த பரிவர்த்தனை எண் மூலம் ஓய்வூதிய தாரர்கள் jeevanpramaan.gov.in இணையதளத்தில் உயிர்ச்சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். சில வங்கிகள் ஓய்வூதியர்களுக்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளன. உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கி, ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஜீவன் பிரமான் உயிர்ச்சான்றை ட்விட்டர் மூலம் வங்கிக்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளத ஜீவன் பிரமான் தவிர, நேரில் விண்ணப்பத்தை அளித்து உயிர்ச்சான்று அளிப்பதும் நடைமுறையில் உள்ளது. ஓய்வூதியர்கள் விருப்பப்பட்டால் பழைய முறையையும் பின்பற்றலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pension, life insurance, bank
× RELATED மீண்டும் குறைந்த தங்கம் விலை;...