×

தமிழக அரசுக்கு சுயமரியாதை இல்லை: ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பேட்டி

சென்னை: தமிழக அரசு சுயமரியாதையை இழந்து மத்திய அரசிடம் சரணடைந்துள்ளதாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று சென்னையில் பேட்டி அளித்தார். பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது: வட நாட்டு தலைவர்களின் மற்றும் கட்சிகளின் ஆதிக்கத்தால்,  தென்னிந்திய மக்கள் தொடர்ந்து இரண்டாம்பட்ச குடிமக்களாக  பார்க்கப்படுகிறார்கள். திராவிட நாடு கோரிக்கை இப்போது இல்லை. ஆனால்,  திராவிட கலாச்சாரம், மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும். அவைகள் தங்கள்  தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது. இதற்கு இந்திய ஆட்சி அதிகாரத்தில்  தென்னிந்தியர்களின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். ஜனநாயக  நாட்டில் யாரும் கட்சி தொடங்கலாம்.

கமல் கட்சி தொடங்கி இருப்பதையும்,  ரஜினி தொடங்க இருப்பதையும் வரவேற்கிறேன். அவர்கள் என்னோடு இணைந்து பணியாற்ற விரும்பினால், அதற்கான தேவை ஏற்பட்டால் இணைந்து பணியாற்றுவேன். தமிழக அரசு பற்றி கேட்கிறீர்கள். நான் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு  சென்றபோது, அங்குள்ள இளைஞர்களை சந்தித்தேன். அவர்கள் தங்கள் சுயமரியாதை  குறித்து மிகவும் கவலை தெரிவித்தனர். தங்கள் அரசு சுமரியாதையின்றி  இருப்பது குறித்து கோபத்துடன் இருக்கின்றனர். தமிழக அரசு மத்திய அரசிடம்  சரணடைந்து இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pawan Kalyan ,government ,Tamil Nadu ,Janasena , Tamil Nadu government, Janasena, Pawan Kalyan
× RELATED மக்களவை தேர்தல்: பிதாபுரத்தில் பவன் கல்யாண் போட்டி