×

சையது மோடி பேட்மின்டன் சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்

லக்னோ: சையது மோடி உலக டூர் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். முதல் சுற்றில் மொரீஷியஸ் வீராங்கனை கேத் பூ குனேவுடன் நேற்று மோதிய சாய்னா 21-10, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய பாருபள்ளி காஷ்யப் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டனோங்சாக் சேன்சோம்பூன்சுக்கை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் புரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 14-21, 11-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ரென் - சவோமின் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Syed Modi Badminton Saina , Said Modi Badminton, Saina, Kashyap,
× RELATED ஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி