×

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் மேரிகோம் உட்பட 4 பேர் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

டெல்லி: டெல்லியில் 10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் (48 கிலோ பிரிவு), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேரும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம்(35), சீனாவை சேர்ந்த வு யூவுடன் பலப்பரிட்சை நடத்தினார். அபாரமாக விளையாடிய மேரிகோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலமாக குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப்பில் 7-வது பதக்கம் வெல்வதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

69 கிலோ எடைப் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்காட் கே பிரான்சஸ் உடன் மோதினார். அவரும் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், சீன வீராங்கனை சென் நியன் உடன் லவ்லினா மோத உள்ளார்.

57 கிலோ எடை பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனியா 4-1 என்ற புள்ளிக்கணக்கில், கொலம்பியாவை சேர்ந்த யெனிம்மை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மேலும் 64 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்தை சேர்ந்த அமிசாராவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனைகள் 4 பேர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Women's Boxing Competition: Indian Marriages ,semi-finals ,Marriott , World Women's Boxing,Competition,Indian wrestlers,Marie Kom,progressed,semifinals
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு