×

விழுப்புரம் அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்ளட்ட 4 பேர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த தேவநாதன், தனது மனைவி மாலினி, மகள் ரம்யா ஆகியோருடன் காரில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சின்னசேலம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டு சுவரின் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற தேவநாதன், அவரது மனைவி மாலினி, மகள் ரம்யா, ஓட்டுநர் பசூல் ரகுமான் உள்ளிட்ட நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : scientist ,Vilupuram , 3 people,killed,nuclear scientist,car,Vilupuram
× RELATED ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு...