×

கஜா புயல் நிவாரண நிதிக்காக சிலம்பாட்டம், கரகாட்டம் கலைகள் மூலம் நிதி திரட்டும் கிராமிய கலைஞர்கள்

மதுரை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுரையில் கிராமிய கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி வருகின்றனர். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவையில் சேதமடைந்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வேதனையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு கை கொடுக்கும் விதமாக மதுரையில் உள்ள தமிழக நாட்டுப்புற இசை மற்றும் நடன கலைஞர்கள் சங்கம் சார்பாக நிதி திரட்டி வருகின்றனர்.

தப்பாட்டம், தவில் நாதஸ்வரம் கலைஞர்கள்,  கரகாட்டம், சிலம்பாட்டம் , பொய் கால் குதிரை கலைஞர்கள் என ஏரளாமானோர் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர். தமிழ்நாடு நாட்டுப்புற இசை பெருமன்றத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மதுரை மாட்டு தாவணி, பூ மார்க்கெட் பகுதிகளில் பறை, சிலம்பாட்டம்,தப்பாட்டம் உள்ளிட்ட கலைகள் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.மதுரை மாட்டுத் தாவணியில் இருந்து திருப்பரங்குன்றம் வரை சுமார் 15 கிமீ தொலைவிற்கு நடந்தே சென்று நிதி மற்றும் நிவாரண பொருட்களை திரட்டி வழங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பொது மக்களும் மனமுவந்து நிதி அளித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : artists ,Karakam Arts ,Cambayam ,storm , Rural artists perform Cilambam and Karakam Arts for the Ghaja storm
× RELATED இசை கலைஞர்கள் சங்க திறப்பு விழா