×

அழிவின் விளிம்பில் உள்ள கறுப்பு காண்டாமிருகங்கள் : ஐரோப்பிய நாடுகளில் இருந்து ருவாண்டாவிற்கு பயணம்

கிகாலி : அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் கறுப்பு காண்டாமிருகங்களை மீண்டும் ருவாண்டாவில் உள்ள காட்டு பகுதியில் விட 3 ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன. உலகிலேயே 900 காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவற்றுள் 90 காண்டாமிருகங்கள் 22 ஐரோப்பிய விலங்கியல் பூங்காக்களில் வசித்து வருகிறது. இந்நிலையில் செக் குடியரசு, இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள 5 கறுப்பு காண்டாமிருகங்கள் வரும் மே அல்லது ஜூன் மாதம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொண்டுவிடப்பட உள்ளன.

செக் குடியரசில் உள்ள Dvur Kralove உயிரியல் பூங்கா, பிரிட்டனின் பிளேமிங்கோ லேன்டு மற்றும் டென்மார்க்கில் உள்ள ரீ பார்க் சஃபாரி ஆகிய இடங்களில் இருந்து 3 பெண் காண்டாமிருகமும், 2 ஆண் காண்டாமிருகமும் முதலில் செக் குடியரசு நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் பழகிவிடப்பட்டு, பின்னர் வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் கிழக்கு ருவாண்டாவில் உள்ள அககெரா தேசிய பூங்காவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இல்லம் திரும்பும் அரியவகை கறுப்பு காண்டா மிருகங்கள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கறுப்பு காண்டாமிருக இனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்ததாக கூறப்படுகிறது. ருவாண்டாவில் 1970களில், 50க்கும் மேற்பட்ட கறுப்பு காண்டா மிருகங்கள் திறந்த புல்வெளிகளில் உலவிவந்தன. 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையால் 5 லட்சம் மக்கள் மட்டுமல்லாது விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத வேட்டை காரணமாக அவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவெனக் குறைந்தது.இந்நிலையில் அரியவகை கறுப்பு காண்டா மிருகங்கள் தங்களது இல்லத்திற்கு திரும்புகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 18 காண்டாமிருகங்கள், தென்னாப்பிரிக்காவிலிருந்து ருவாண்டாவிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : countries ,European ,Rwanda , Black rhinos on the verge of ruin: travel to Rwanda from European countries
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...