×

கஜா புயல் நிவாரணத்திற்காக அறிவிக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக அறிவிக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் அருகில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 பேர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது பாதிக்கப்பட்ட துறை ரீதியாக நிதி ஒழக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:

* மின்சாரத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* மீன்வளத்துறைக்கு ரூ.41.63 கோடி ஒதுக்கீடு.
* உள்ளாட்சித்துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* பயிர் பாதுகாப்பிற்காக ரூ.350 கோடி ஒதுக்கீடு.
* சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.205.87 கோடி ஒதுக்கீடு.
* குடிநீர், சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.102.5 கோடி ஒதுக்கீடு.
* டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.
* புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் நிதிக்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு.

இதற்கிடையே இன்று டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.13,000 கோடி நிதி கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Government of Tamil Nadu , Gajah Storm, Relief, Finance, TN Government, Govt
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...