×

டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவான கஜா புயல் கடந்த வெள்ளியன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்ததில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு 1 வாரத்திற்குள் புத்தகங்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நாளை மாலைக்குள் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புது புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Schools ,Chengottai ,districts ,Delta , Gajah Storm, Minister Chengottai, schools opening
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...