×

பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா, ஆட்டுக்கறியா? டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ இறைச்சி  நாய்க்கறியா அல்லது ஆட்டுக் கறியா என்பதை கண்டறிய  டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து கடந்த 18ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த  மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பார்சல்களை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி  அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பார்சல்களில் துர்நாற்றம் அடித்தபடி மாட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பார்சல்களில் இருந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் நாய் இறைச்சியாக இருக்கும் என்றும், மாட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சியை சேர்த்து பார்சல்களில் அனுப்பியிருக்க கூடும் என்றும் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த 20 இறைச்சி பார்சல்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சர்களில் மொத்தம் 2000 கிலோ இறைச்சி இருந்தது. இதை தொடர்ந்து  பார்சல்களில் இருந்து இரண்டு இறைச்சி துண்டுகளை  சோதனைக்காக வேப்பேரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக  முதற்கட்ட சோதனையில் வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதன் முடிவில் தெளிவான முடிவு கிடைக்காத காரணத்தால் அந்த இறைச்சிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். மேலும், இதுதொடர்பான முழுமையான அறிக்கை நாளை கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dog, DNA test,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...