×

கஜா புயல் பாதித்த பகுதிகளில் திருத்தணி மின் ஊழியர்கள் சீரமைப்பு பணி

திருத்தணி: தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கஜா புயலால் பெரும் சேதமடைந்தது. இதில் ஏராளமான மின்கம்பங்கள் உடைந்ததால் பல  பகுதிகள் இருளில் மூழ்கியது. இதை சீர் செய்வதற்காக திருத்தணி கோட்ட  செயற்பொறியாளர் கனகராஜன் தலைமையில், உதவி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீராம்,  உதவி பொறியாளர் கோபிநாத் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  மின்வாரிய ஊழியர்களுடன் திருக்குவளைக்கு சென்று மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டு, அங்குள்ளவர்களுடன் சேர்ந்து உதவிபுரிந்து வருகின்றனர்.

ஏராளமான மின்கம்பங்கள்  பாதிக்கப்பட்டிருப்பதால் மேலும் திருத்தணி மின் கோட்டத்திலிருந்து 250  மின்வாரிய ஊழியர்கள் அரசு பேருந்து, வேன்கள் மூலம் புயல் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி பொறுப்பு கோட்ட பொறியாளர் மோகன்  சுப்பிரமணியம், உதவி கோட்ட செயற்பொறியாளர் இளங்குமரன், உதவி பொறியாளர்கள்  முரளி, வேண்டாம் அமிர்தம், ராஜா கண்ணன் உதயகுமார் ஆகியோர் நேற்று மாலை சென்றனர். இவர்கள், புயல் பாதித்த பல்வேறு இடங்களுக்கு சென்று மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : power staff ,areas ,Tiruttani ,storm ,Ghazi , Kajah storm, affected area, ammunition, power workers, renovation work
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்