×

கரும்பு தொட்டிலின் சிறப்பு

திருவண்ணாமலை: திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியினர் திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் தங்களது வேண்டுதலை வைப்பார்கள். இதை ஏற்று அண்ணாமலையார் அருளால் குழந்தை பிறந்த பிறகு தீபத்திருவிழா தேரோட்டத்தின்போது கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து தம்பதியினர் தேரின்போது வருவார்கள். இவ்வாறு ஏராளமான தம்பதியினர் குழந்ைத பாக்கியம் பெற்றுள்ளனர்.அதன்படி இன்று காலையில் திருவண்ணாமலையில் தேரோட்டம் தொடங்கியது. அப்போது ஏராளமான தம்பதியினர் தங்கள் குழந்தையை கரும்பு  தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால்  கரும்புகள் அதிகளவு விற்பனையானது. ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் தென்  மாவட்டங்களில் இருந்து கரும்புகள் வரத்து குறைவாக இருந்ததால்,  குறைந்தளவே கரும்புகள் வந்துள்ளது. இதனால் ஒரு கட்டு கரும்பு ₹400க்கு விற்பனையானது.

தீப விழா: விழாவின்  முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 23ம்தேதி ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4  மணிக்கு கோயிலில் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668  அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இவ்விழாவை காண இந்தியா  முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும்,  பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள்: அண்ணாமலையார்  கோயிலில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் பிரகாரங்களுக்குள் எந்த கோபுர  வாயிலின் வழியாக நுழைந்தாலும், பக்தர்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக  கண்காணிக்க முடியும்.

மேலும், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு  அறைகளும் தொடங்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் நான்கு பிரதான  கோபுர வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பின்  கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், நகரின் முக்கிய  இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sugarcane tank, Thiruvannamalai
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...