×

காப்பகத்தில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட விவகாரம் : பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா நீதிமன்றத்தில் சரண்

பாட்னா; பீகார் காப்பகத்தில்சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவகாரத்தில், சமூக நலத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய மஞ்சு வர்மா 3 மாத தலைமறைவிற்கு பின் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.பீகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் கணவர் சந்திரசேகர் வர்மா அந்த காப்பகத்திற்கு அடிக்கடி சென்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

எனவே இவ்வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, மஞ்சு வர்மா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மஞ்சு வர்மா தலைமறைவானார். அவரது கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டில் சோதனை நடத்தி போலீஸார், அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அவரை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். சுமார் 3 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய மஞ்சு வர்மா, இன்று மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manjula Verma ,BANGALORE ,Bihar ,court , Girls raped, Bihar archive, Manchu Verma
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...