×

மஹாராஷ்டிராவில் உள்ள ராணுவ குடோனில் வெடி விபத்து: 6 பேர் பலி

வார்தா: மஹாராஷ்டிராவில் உள்ள ராணுவ குடோனில் வெடிமருந்து வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே உள்ள புல்கான் என்ற பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7.30 மணி அளவில், அங்கிருந்த பழைய வெடிமருந்துகளை மண்ணில் புதைக்கும் பணி நடந்த போது, அந்த வெடிமருந்துகள் எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 18 பேரும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேரின் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 2 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 4 பேர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. புல்கான் பகுதியில் அமைந்துள்ள இந்த ராணுவ குடோன் நாட்டிலேயே மிகப்பெரிய ஆயுத கிடங்காக கருதப்படுகிறது. இதில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கமாரியா கட்டளைத் தொழிற்சாலை அதிகாரிகளும், ஜபல்பூர் மற்றும் சந்திரபூர் ஒழுங்குமுறை தொழிற்சாலை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : explosion ,Maharashtra , Maharashtra,military blast,blast,death
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...