×

சிங்கம்புணரியில் கஜா தாக்குதலால் கயிறு தொழில் பாதிப்பு : திரிக்கும் கூடங்கள் சேதமாகின

சிங்கம்புணரி:  சிங்கம்புணரியில் கஜா புயல் தாக்குதலில் கயிறு திரிக்கும் கூடங்கள் சேதமடைந்தன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து அவதியடைந்து வருகின்றனர். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை நார் கயிறு உற்பத்தி புகழ்பெற்று விளங்கி வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நம்பி வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கதிர்கட்டும் 5 அடி நீள கயிறு முதல் 50 அடி நீளமுள்ள தேர் வட கயிறுகள் என பல வகையான கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஏற்கனவே மூலப்பொருள் பற்றாக்குறை, பிளாஸ்டிக் கயிறுகள் வருகை உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் நலிவடைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீசிய கஜா புயல் மேலும் இவர்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அதாவது புயல் காரணமாக கயிறு திரிக்கும் இயந்திரங்கள், கூரை செட்டுகள் சாய்ந்து ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கி தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,mire ,Caja ,Singapamana , Singapuneri, kajaa, rope industry
× RELATED ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது ஹவுதிகள்...