×

பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஓராண்டு தடையில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், வார்னர் மீதான தடை மறுபரிசீலனை

மெல்போர்ன்: இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது. ஸ்மித், வார்னர் அணியில் இல்லாததால் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. எனவே இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கமும் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

இந்தியாவிடம் ஆஸ்திரேலியா அணி முதன்முறையாக தனது சொந்த மண்ணில் தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிடம் தொடரை இழந்தால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நினைப்பதால் தண்டனை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஓராண்டு தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தடை குறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Smith ,Australian ,Warner , One-year,ban,ball tampering,Australian Captain,Smith, Warner,reconsider,ban
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...