×

உயிரையும் பொருட்படுத்தாது கஜா புயலில் கோர தாண்டவத்தில் இருந்து புத்தகங்களை பாதுகாத்த புக்'மேன்'

தஞ்சை : சுற்றி சுழன்று முடிந்த கஜா புயலில் ஏராளமான வீடுகள், மரங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட நிலையில் புயல் இடமிருந்து புத்தகங்களை பாதுகாத்து உள்ளார் ஒரு புக்மேன். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சியைச் சேர்ந்த 60 வயதான முதியவர் சிவசண்முகவேலு ஆவார். கஜா புயலில் இருந்து புத்தகங்களை பாதுகாத்த புக்மேன். திருமணம் செய்து கொள்ளாத சிவசண்முகவேலுவிற்கு சமூக பிரச்சனைகள், அது தொடர்பான பொது நல வழக்குகள், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் இவைதான் முழு நேர பணியாகும்.

எஞ்சி இருக்கும் நேரத்தில் தனது ஒன்றரை ஏக்கர் தென்னை விவசாயத்தை கவனித்து வரும் இவர், ரஷியன், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என 16 மொழிகளில் பேச படிக்க தெரிந்தவர்.1970ம் ஆண்டு முதல் புத்தகங்கள் மீது தீரா காதல் கொண்ட சிவசண்முகவேல் தன்னுடைய ஒவ்வொரு வருவாயையும் புத்தகங்களுக்காக செலவிட்டுள்ளார். புத்தகம் தரும் அறிவை கொண்டு பிறருக்கு நல்லறிவை பயிற்றுவிப்பதும் அதன் மூலம் ந்ல்லக் கருத்துக்களை விதைப்பதுமாய் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நிலையில், சிறுக சிறுக சேர்த்த புத்தகங்களை நள்ளிரவில் வந்த கஜா புயல் வாரி சுருட்ட தயாரானது.

உறக்கத்தை களைத்த சிவசண்முகவேல், தனது வீடே புயலால் உருக்குலைந்து பறக்கும் நிலையில், உயிரையும் பொருட்படுத்தாமல் உடமைகளை கண்டு கொள்ளாமல் சேகரித்த புத்தகங்களை பாதுகாத்து இருக்கிறார். புத்தகங்கள் மட்டுமின்றி பயனுள்ள நாளிதழ் குறிப்புகளையும் சேகரித்து வரும் இவர், தனக்கு பின்னால் வரும் சங்கதிகளுக்கு தனது புத்தகம் பயன் தரும் என்பதாலேயே அவற்றை போராடி மீட்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bookmans ,storm ,Khaja , Bookmans who preserve books from Khaja storm,
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு