×

கஜா புயல் தாக்கத்தால் விராலிமலையில் 500 ஏக்கர் எலுமிச்சை மரங்கள் நாசம்

விராலிமலை: விராலிமலை ஒன்றிய பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 5 லட்சம் எழுமிச்சை மரங்கள் கஜா புயலின் தாக்கத்தினால் நாசமானது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலை ஊராட்சி ஒன்றியம் அகரப்பட்டி. மீனவேலி, வாணதிராயன்பட்டி, ராஜாளிபட்டி, கசவனூர், தேன்கனியூர், பொய்யாமணி, விருதாப்பட்டி, நம்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எழுமிச்சை சாகுபடி செய்திருந்தனர்.

இதில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 5 லட்சம் எழுமிச்சை மரங்கள் வேறோடு படிங்கி எறியப்பட்டு பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், 2007 ஆண்டுக்கு பிறகு கடும் வரட்சியால் பாப்படைந்த எங்கள் பகுதியில் கிணறு மற்றும் ஆழ் குழாய் கிணற்றின் மூலம் எழுமிச்சை கன்றுகளை நட்டு வளர்த்து வந்தோம். தற்பொழுது புயல் தாக்கத்தினால் மரங்க வேறுடன் பிடிங்கி எறியப்பட்;டு மிகவும் பாதிப்படைந்துள்ளோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்தள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm attack ,Ghaz , Gajah Storm, Viralimalai, Lemon Trees
× RELATED மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில்...