×

வையம்பட்டி அருகே கஜாபுயல் தாக்கி ரூ.25 லட்சத்தில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட பசுமை குடில் நாசம்

மணப்பாறை:  வையம்பட்டி அருகே கஜாபுயல் தாக்கி 25 லட்சம் மதிப்பில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட பசுமை குடில் நாசமானது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள புதுக் கோட்டை ஊராட்சி. கள்ளிகாட்டுப் பட்டியில் தங்கவேல் என்பவர் முற்றிலும் இஸ்ரேல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரூ.25 லட்சம் செலவில் அரை ஏக்கர் அளவில் நவீன வேளாண்மை பசுமை குடில் அமைத்திருந்தார். நேற்று முன்தினம்  கஜாபுயல் நடத்திய கோரத்தாக்குதலில் இந்த பசுமை குடில் அப்படியே சரிந்து விழுந்தது.

மேலே, இருந்த இரும்பு சாரங்கள், பைப்புகள் காற்றில் பறந்து தூரத்தில் சென்று விழுந்தது.மேலே வேயப்பட்ட அதிநவீன பாலீதின் சீட்டு கள் முற்றிலும் கிழிந்து காற்றில் பறந்தது. இது தவிர, நடுப்பட்டி, கல்பட்டி, பொம்மக்காவூர், புதுவாடி, முகவனூர், உள்பட பல இடங்களில் வேளாண்மை பயிர்கள், தென்னை, வாழை, மற்றும் பயன் தரும்  மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்த இந்த கஜாப் புயல் தாக்குத லுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kajapalayal ,Vayampatti ,Green Ground ,Israel , Vayambatti, kajapayal, green chut
× RELATED நவம்பர் முதல் தேதி பள்ளிகள் திறப்பு,...