இலங்கை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறிசேனா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

கொழும்பு: அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நடத்திய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தது. இலங்கையில் அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த போலீசார் மீது நாற்காலிகள் வீசி தாக்கினர். நாடாளுமன்றத்தில் நடந்த அடிதடி ரகளையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இதனால், அவையை இன்று வரை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அவரது அதிபர் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர். அரசியல் குழப்பம் ஏற்பட்ட பிறகு, சிறிசேனா, ராஜபக்சே, விக்ரமசிங்கே மூவரும் முதல் முறையாக சந்தித்து பேசினர்.ஆனால் இந்த சந்தி ப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை. அனைத்து கட்சி கூட் டத்தில் எந்த முடிவும் எட்டப் படாமல் தோல்வியில் முடிந்த தாக விக்ரமசிங்கே ஆதர வாளர்கள் கூறி உள்ளனர். பெரும்பான்மை பலம் இருப்பதால், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி வருகிறார். இதுதொடர்பாக அதிபர் சிறிசேனா வாய் திறப்பதில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், சிறிசேனாவுடன் சுமூகமாக செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஆனாலும், இலங்கையில் அதிகாரப்பூர்வமாக எந்த அரசும் தற்போது ஆட்சியில் இல்லை. இந்தநிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்ற கூட்டம் நடக்க இருப்பது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>