×

இறுதி போட்டியில் ஜோகோவிச் - ஸ்வெரவ் மோதல்: பெடரர் ஏமாற்றம்

லண்டன்:  ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (ஜெர்மனி) மோதுகிறார். ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மற்றும் ஜோடிகள் மோதும் இந்த தொடர் லண்டன் O2 அரங்கில் நடைபெற்றது. எட்டு வீரர்களும் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதினர். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதியில் ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை (4வது ரேங்க்) மிக எளிதில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு அரை இறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருடன் (2வது ரேங்க், சுவிஸ்) மோதிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3வது ரேங்க்) 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்துக்கு நீடித்தது. ஒற்றையர் ஆட்டங்களில் இதுவரை 99 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ள பெடரர் (37 வயது) தனது 100வது பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க இன்னும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சீசன் முடிவு சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் ஜோகோவிச் (31 வயது) - ஸ்வெரவ் (21 வயது) மோதுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,match ,Jokovic - Svarov ,Federer , DJokovic, Svarov, final, Federer
× RELATED 2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்