×

அரசியலை விட்டு ஒதுங்கி விட்டேன் என் இயக்கத்தில் ரஜினி, கமல் நடிக்கலாம்: பாரதிராஜா பேட்டி

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழக திரையுலகில் தமிழ் நடிகைகள் மிகவும் குறைவு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பெண்ணை வைத்து புதிய திரைப்படம் இயக்கியுள்ளேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டேன். நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினராக இல்லை. சீமானின் நோக்கம் சரியாக உள்ளதால் நான் அவருக்கு ஆதரவாக உள்ளேன். எனக்கும் வயதாகி விட்டது. நடிகர் ரஜினி, கமலுக்கும் வயதாகி விட்டது. இருந்தாலும் என்னுடைய இயக்கத்தில் ரஜினி, கமல் மீண்டும் நடிக்க வந்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini ,Kamal ,interview ,Bharathi Raja , left, politics, Rajini ,Kamal ,Bharathiraja's
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...