×

இந்தியாவின் முதுகெலும்பான தொழில்களை அழித்து விட்டனர்: அறிவழகன், பொருளாதார வல்லுனர்

ரூபாய் நோட்டு செல்லாது என்பது இந்தியாவிற்கு ஒவ்வாத திட்டம். ஒரு வேளை இந்த திட்டம் வெற்றி என்றால், பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை ஜிடிபி 7 சதவீதமாக தான்  உள்ளது. இந்த அறிவிப்பு சரியாக இருந்தால் 9 சதவீதம் ஜிடிபி சென்றிருக்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆயிரம் சிறுகுறு தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பண மதிப்பிழப்பு மட்டுமின்றி  ஜிஎஸ்டியும் ஒரு முக்கிய காரணம்.  சிறு குறு தொழிற்சாலை தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால், அந்த தொழிற்சாலைகளை அழித்து விட்டனர். சிறு குறு தொழிற்சாலைகள் மூலம் குறைந்தது. 4 ேபருக்காவது வேலை வாய்ப்பு தந்து கொண்டிருந்தது.எந்த தொழிலாக இருந்தாலும் முதலீடு என்பது மிக முக்கியம். பெரிய நிறுவனங்களுக்கு வங்கி மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். ஆனால், சிறு குறு தொழில்கள் என்பது ரொக்க பரிவர்த்தனை தான். அந்த  தொழிற்சாலைகள் வேலை பார்ப்பவர்கள் தினக்கூலி, வாரக்கூலி, மாத சம்பளம் வாங்குபவர்களாக தான் உள்ளனர். எனவே, ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை பணம் அவர்களுக்கு தேவை.

 பணமதிப்பிழப்பு அறிவித்தவுடனே, கையில் வைத்திருந்த பணத்தை அவர்கள் முதலீடாக இருந்ததை வங்கிகளில் போட்டு விட்டனர்.  இதனால், அவர்கள் அடுத்த கட்டமாக தொழிலுக்கு பணம் இல்லாத நிலை தான் இருந்தது.  அவர்களால் வங்கிகளில் இருந்து பணத்தை திரும்பி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.  ரூபாய் நோட்டு செல்லாது என்று திடீரென அறிவிக்கப்பட்டது. நமது இந்தியாவில் அதிகபட்சம் ரொக்க பரிவர்த்தனைதான். எனவே, அதை  அரசு  ெதரிந்து கொண்டு, முன்னேற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார விவரத்தை அறியாமல் ஒரே இரவில் பண மதிப்பிழப்பை அறிவித்ததால் பாதிக்கப்பட்டது  பொதுமக்கள்தான். இது இன்டர்னல் சிவில் வார் போன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்தது. பணம் எடுக்க மக்கள் அலையாய் அலைந்தனர். அந்த சமயத்தில்  திருமணம் வைத்திருந்தவர்கள் படாதபாடு பட்டனர். பண்டிகை  தினங்களில் கூட வியாபாரங்கள் படுத்து விட்டன என்றால் சிறு, குறு தொழில்கள் முடங்கியது தான் காரணம்.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க கூடாது என்று தீவிரவாதிகள் எல்லை பகுதியை குறி வைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. அதே போன்று கருப்பு பணம் வைத்திருப்பவர்களை குறி வைத்து  நடவடிக்கை எடுத்து இருக்கலாம். 20 சதவீதம் பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர். அவர்களை தண்டிக்காமல் ஒட்டு மொத்தமாக மக்களை பாதிக்கும் வகையில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டது பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு ஆண்டுகளில் கணக்கில் வராத பணம் என்று பார்த்தால் குறைவாக தான் வந்துள்ளது. மத்திய அரசால், கருப்பு பணம் ஒழிப்பு, தீவிரவாதத்திற்கு பணம் போகிறது என்று கூறி வந்த நிலையில், அதற்கான ஆதாரத்தை  இப்போது கேட்டால் உண்மையில் இல்லை. யாரும் கருப்பு பணமாக வைத்திருப்பதில்லை. சொத்துக்களாகத்தான் அவை உள்ளது. அவர்கள் எங்கெல்லாம் சொத்து வாங்கி வைத்திருக்கின்றனர் என்று விசாரணை நடத்தி அவர்கள்  மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதை விடுத்து திடீரென ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது தவறான நடவடிக்கை. பொருளாதார விவரத்தை அறியாமல் ஒரே இரவில் பண மதிப்பிழப்பை அறிவித்ததால் பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான். இது இன்டர்னல் சிவில் வார் போன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anthropologist ,India , India's, backbone,, jobs,epicenter, economist
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...